Sunday, April 05, 2020

KING AND FOUR WIVES என்ற
ஆங்கில நீதிக்கதையின் தமிழாக்கம் முயற்சி:

நான்கு மனைவிகள்!

மன்னருக்கு நான்கு மனைவிகள்! அந்நாட்டு
மன்னர் மரணப் படுக்கையில் வீழ்ந்திருந்தார்!
தன்சாவில் மன்னர் தனிமைப் பயணத்திற்கு
அஞ்சி உடனழைத்தார்  நான்கு மனைவிகளை!
சொன்னதென்ன? பார்ப்போமா? நாம்.

நான்காம் மனைவியைக் கூப்பிட்டார்! என்னோடு
சாகத் தயாரா? வருவாயா? என்றுகேட்டார்!
நான்காம் மனைவியோ என்னால் முடியாது
போகின்றேன் என்றாள் நகர்ந்து!

மூன்றாம் மனைவிக்கு கர்வமுண்டு!என்னோடு
சாகத் தயாரா? வருவாயா? என்றுகேட்டார்!
வாழ்வை விரும்புகிறேன்! நானோ மறுமணம்
ஏற்பேன் எனவே முடியாது என்றுரைத்தாள்!
காற்றைப்போல் சென்றாள் விரைந்து.

இரண்டாம் மனைவியோ தேவையான நேரம்
வருவாள் துணைபுரிவாள்! என்னுடன்
சாகத்
தயாரா? வருவாயா எனக்கேட்டார்! மன்னா!
தயாராய் இறுதிச் சடங்கைச் செய்வேன்!
அதற்குநான் அங்கே வருவேன் அய்யா!
எனச்சொன்னாள்  உள்ளம் உவந்து.

நான்வருவேன் உங்களுடன் என்றே குரல்கேட்க
பார்த்தார் அரசன்! அவள்தான் முதல்மனைவி!
வாழ்நாளில் காட்டிய அக்கறை கொஞ்சந்தான்!
பார்த்தவர் உள்ளம் கலங்கியது! தேன்மகளே!
வாழ்விலே உன்மேல்தான் அக்கறை
கொண்டிருக்க
வேண்டுமென்றார் உள்ளம் நெகிழ்ந்து.

உடல், உறவுகள்,உடைமைகள்,உயிர்!

அனைவருக்கும் நான்கு மனைவிகள் உண்டு!
உடலிங்கே நான்காம் மனைவி !  நகைகள்,
விதவிதமாய் ஆடைகள், கூந்தல் அழகு
கடைகடையாய் ஏறி கவனித்த போதும்
எதுவும் இறந்ததும் வாராதுபார் சேர்ந்து!
உடலின் நிலைதான் இது.

மூன்றாம் மனைவி உடைமைகள்! என்னென்ன
வாங்கினோம் சேர்த்திருந்தோம்  இல்லம் நிறையத்தான்!
ஏங்கித் தவிப்போம் நினைத்தது இல்லையென்றால்!
வாங்கிக் குவிப்போம்! அளவுக்கு மீறித்தான்!
நாமோ இறுதிப்பயணத்தில்! இந்தப் பொருளெல்லாம்
யாரோபோல் தள்ளிச்  சிதறிக் கிடக்குமங்கே!
மீண்டும் மணமுடித்து வாழத் தயாராகும்
மாதைப்போல் மற்றவர் வாழ்விலே சேர்ந்திடும்!
வாராது எப்பொருளும் காண்.

இரண்டாம் மனைவி குடும்பம்,உறவு!
நெருங்கிப் பழகுவோம் தேவையான போது
அருகில் வந்தே துணைநிற்பார்! ஆனால்
இறுதிப் பயணத்தின் போது கூடி
அனுப்புவார் கண்ணீர் பொழிந்து.

முதல்மனைவியே நமது உயிராகும்! வாழ்வில்
இதற்குநாம் போதிய அக்கறை காட்டும்
நடைமுறை மேறகொள்ளோம்! ஆனால் இதுதான்
கடைசிவரை நாம் மறைந்தபின்னும் நம்மைத்
தொடர்ந்துவரும் நற்றுணை யாம்.

அவரவர் நம்பிக்கைப் பாதையில் நாமும்
தரமாய் மதித்தேதான் ஆவன செய்து
உரமாக்கிக் கொள்ளவேண்டும்! இந்த உயிர்தான்
நிரந்தர நண்பன் உணர்.

மதுரை பாபாராஜ்







0 Comments:

Post a Comment

<< Home