Saturday, April 04, 2020

குடும்பநண்பர் திருமதி காந்தி ஆறுமுகம் அவர்களுக்கு வாழ்த்து!

குடும்பநண்பர் திருமதி காந்தி ஆறுமுகம் அவர்களுக்கு வாழ்த்து!

நட்பு அரும்பிய ஆண்டு 1996-- தொடர்கிறது!

வேலப்பன் சாவடி கேந்ரி யவிகாரில்
நாங்கள் குடியேற வந்தோம் பொருளுடன்!
மேல்வீட்டார் வந்தார் துணைபுரிய! கா்ந்தியென்றார்!
நாளும் கிழமையும் நட்பு வளர்ந்தது!
பாந்தமுடன் வந்தார் சிரித்து.

குழந்தைகள் வந்தார் படிப்பதற்கு! நட்பில்
திளைத்தோம் குடும்பம் பழகியது எங்களுடன்!
அப்புவும் ராஜியும் ஆறுமுக அன்பரும்
நட்புடன் நாளும் பழகினர்! பேருதவி
அக்கறையாய் வந்தே அளித்திருந்தார்
காந்திதான்!
நட்பின் நளினத்தை வாழ்த்து.

அங்கிருந்தே இங்குவந்தோம்! கூப்பிடுவோம்  வந்திடுவார்!
எங்கள் குடும்பத்தில் ஒன்றினார் காந்திதான்!
இன்றும் தொடர்புண்டு! சற்றுமே தொய்வில்லை!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

ஆறுமுகம் அன்பும் அமைதியும் கொண்டவர்!
ஆன்மிக ஆர்வலர்! பக்திநெறி வாழ்பவர்!
ஆறுமுகம் காந்தி இணையரின் இல்லறத்தில்
பாடுபட்டு வாழ்கின்ற நல்லறத்தை வாழ்த்துவோம்!

அப்புவும், ராஜி குடும்பமும் பெற்றோரும் சூழ்ந்திருக்க
எக்கணமும் இன்பமுடன் பல்வளங்கள் பெற்றேதான்
நற்றமிழ்போல் வாழ்க மகிழ்ச்சியுடன்  பல்லாண்டு!
முத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home