Tuesday, April 07, 2020

அருகருகே வீடுகள் அன்று!

தரைத்தளம் மற்றும் முதல்தளம் கட்டி
அருகருகே நிற்கும் தனித்தனி வீடு
தெருவின் வலப்பக்கம் மற்றும் எதிரில்
வரிசையாய்க் கட்டியே வாழ்ந்தனர் மக்கள்!
வரிசைக் கிடையே கடைகள் இருக்கும்!
எழிலான  நல்லமைப்பில் வாழ்வு.

வாசல் திறந்தால் அடுக்களைப் பின்வாசல்
மட்டும் தெரியும்! இடையில் சுவரில்லை!
அம்மா அடுப்படியில் நின்றேதான் வாசலில்
வந்துநிற்போர் யாரென்றே கண்டுகொள்வாள் அன்றுதான்!
எந்தவித அச்சமின்றி வாழ்வு.

வீடுகளுக்கு  எல்லாம் திறந்தவெளிப் பின்வாசல்!
வீடுகளில் அன்று கிணறுகள்தான் நீரிறைக்க!
பக்கத்து வீட்டில் உரையாட பின்வாசல்
மக்கள் பயன்படுத்தி னார்.

கூட்டு வீடு( compound)

பொதுவாசல் ஒன்றிருக்கும் உள்ளே நுழைந்தால்
பொதுவெளி உண்டு! இரண்டு பக்கம்
வரிசையாய்ச் சின்னஞ்சிறு வீடுகள் கட்டி
சிரித்துவாழ்ந்த கூட்டு வீடு.

அக்காலச் சூழலுக்கு ஏற்றவாறு வீடுகள்
கட்டியே வாழ்ந்தனர் அன்றாடம் மக்கள்தான்!
இப்பொழுது காலமாற்றம் கோலமாற்றம்
ஆனதால்
முற்றும் அடுக்கக பாணியில்  அங்கங்கே
கொத்து கொத்தாய்  வீடு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home