Wednesday, April 08, 2020

அடுக்ககங்கள் இன்றைய தேவை!

மாநகரில்  மக்கள் நெரிசல் அதிகரிக்க
வீடுகளை மக்கள் குடியிருக்க கட்டினார்!
வீதிகளில் நாளும் அடுக்ககங்கள் மாடிமேல்
மாடிகட்டும் சிந்தனை தோன்றியது! வாழ்கிறோம்!
கூடுகளின் மாற்று உரு.

பழங்கால வீடுகளை  வல்லுநர்கள் வாங்கி
உளங்கனிந்து கொடுத்தவர்க்கு கட்டுகின்ற வீட்டில்
இரண்டுமூன்று வீடுகளைத் தந்துவிட்டு மேலும்
உரிய பணமும் கொடுத்தேதான் தங்கள்
வரைபடத்திற் கேற்ப அடுக்ககம் கட்டும்
கலைவளர்ச்சி காண்கிறோம் இன்று.

எங்கெங்கு பார்த்தாலும் நாட்டில் அடுக்ககந்தான்!
இன்றைய தேவையாய் மாறி அதற்கேற்ப
நம்முடைய வாழ்நிலை மாறிய கோலம்!
தன்னல வாழ்வில் பொதுநலக் கூட்டு!
எங்கும் அனுசரிப்பே வாழ்வு.

நிலமும் தளமும் உரிமையில்லை! வீட்டின்
சுவர்கள் பொதுச்சுவரே! வீட்டிற்குள் நாளும்
அழகான வாழ்க்கை! அடிப்படைத் தேவை
இரவும் பகலுமென உண்டு.

பொதுவளாகம் பூங்கா விளையாட்டு மைதானம்
உடற்பயிற்சிக் கூடம் நிகழ்ச்சிகள் கூடம்
மகிழுந்து வாகனங்கள் நிற்க நிறுத்தம்
நடைப்பயிற்சி போக இடங்களும் உண்டு!
தடையற்ற மின்சாரம் எப்போதும் உண்டு!
நடைமுறையில் எல்லாமே உண்டு.

மின்தூக்கி உள்ளதால் மேல்தளத்தில் உள்ளவர்கள்
இங்கே படிப்டியாய்  ஏறித்தான் மூச்சுவிடத்
துன்பப் படுகின்ற கோலமில்லை நாள்தோறும்!
மின்தூக்கி சேவையைப் போற்று.

முன்வாசல் உண்டு! நுழைந்தால் அறைகளுடன்
அங்கே அனைத்து வசதிகளும் வாழ்வதற்கு!
பின்வாசல் இல்லை! பறவைக் கூடுகள்போல்
முன்நுழைந்து முன்திரும்பும் கூடு.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home