Monday, May 04, 2020

மதுவெறியர்கள்!

குறள் 922:

உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.

கொரோனா கிருமிகள் தாக்கினாலும் நாங்கள்
வரிசைகட்டி நிற்போம் மதுவாங்க என்றே
நெரிசலை உண்டாக்கி எச்சரிக்கை மீறும்
தரிசுமனப் பித்தரைச் சாடு.

இந்தவெறி உன்வாழ்வைப் பாழாக்கும் என்றேதான்
என்னதான் சொன்னாலும் கேட்க மறுக்கின்றார்!
சொந்த மதியைத் தடுமாற வைக்கின்ற
இந்த மதுவெறியை நாளும் தவிர்த்துவிடு!
உன்மதிப்பு கூடும் உணர்.

மதுவெறி உண்டாக்கும் தீமைகளைச் சொல்ல
அதிகாரம் தந்திருக்கும் வள்ளுவத்தைப் போற்று!
மதிமயக்கம் தந்தே மதிப்பிழக்கச் செய்யும்
மதுவகையைத் தீண்டாதே நீ.

மதுரை பாபாராஜ்

மதுரையின் பாபா மதுவை விலக்க
மதுர கவிதந்தார் மாண்பு.

கமல்குமார்

மதுமயக்கத்தை மங்காதநம்தமிழில் கவிதை தந்த அமைதியில் ஓர் ஆற்றலாளர் திருக்குறள் அமுதம் தரும் ஆற்றல் வாய்ந்த கவிஞர் எங்கள்  மதுரை பாபாராஜ் காலத்திற்கு தேவையான காலப் பதிவு நன்று. நன்றி.வாழ்த்துக்கள்.இறைவன் நம்மோடு.

ஜான் மோசஸ்
மதுரை

0 Comments:

Post a Comment

<< Home