Friday, May 15, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


நீலப் பறவையே! சோகமாய் நிற்கின்றாய்!
ஆலாய்ப் பறக்கின்றார் போதையில் தள்ளாட
காலை முதலாக
நீண்ட வரிசையில்!
இல்லாளை இல்லா தவளாக்கி பிள்ளைகள்
எல்லாம் நடுத்தெருவில் நின்றிருக்க இங்குவந்தார்!
துள்ளி வருவதைப் பாராய்! சோகமின்றி!
நல்லவேளை இல்லை உனக்கு.

மதுரை பாபாராஜ்

போதை வெறியர்கள் வரிசையில்!

உடுக்கை இழந்தவன் கைபோல இன்றி
தடுக்க முடியாத கண்களாக மாறி
உறுத்தலுடன் நிற்கின்றோம் கைபிசைந்து! இங்கே!
கொரோனா கவலை நமக்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home