Monday, June 15, 2020

இலக்கியக் காட்சி

முத்தொள்ளாயிரம் 53

பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர
நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப – ஆற்ற
அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே
இலங்கிலைவேற் கிள்ளி களிறு. – 53

கழுகுகள் கூட்டம் பறந்துவர, ஊளை
நரிகளின் கூட்டம் தொடர்ந்துவர அங்கே
அருகில் அலகைகள் ஆடிவரத் துள்ளி
வருகிறது கிள்ளியின் போர்க்களிறு பாராய்!
அருமை களக்காட்சி தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home