Friday, July 10, 2020

குறள்நெறிக் குரிசில் சி.இராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்து.

10.07.20
இணையவழிக் கலந்துரையாடல்!

ஆய்வரங்கம்!

ஏழுவகை மாந்தர்கள்!

வள்ளுவ ஆழிக்குள் மூழ்கியே முத்தெடுத்துத்
தெள்ளத் தெளிவாக ஏழு வகைமனிதர்
உள்ளதைக் கண்முன் படம்பிடித்துக் காட்டிய
நல்லுரை தந்தவரை வாழ்த்து.

அறவோர் வினைவிழைவான் சொல்லே ருழவர்
மறைந்தொழுகும் மாந்தர்கள் கீழ்கள் உலகில்
குமுறுகின்ற  தூங்கும் எரிமலைகள் ஏழாம்!
அமைத்த முறையிங்கே நன்று.

ஆற்றொழுக்குப் பேச்சால் அரங்கத்தின் மாந்தர்கள்
காட்டிய ஆர்வமே பேச்சுக்குச் சான்றாகும்!
பேச்சிலும் மூச்சிலும் வள்ளுவத்தை வாழ்வியலாய்ப்
போற்றுகின்றார் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home