பாலாவின் சங்கச்சுரங்கம்!
இணையப்பத்து-- முதலாம் பத்து குறித்த
கலந்துரையாடல்
31.07.20
சங்கச் சுரங்கம் முதல்பத்து வெள்ளிகள்
தங்கமாய் வைரமாய் வைடூ ரியங்களாய்
சங்க இலக்கியக் காட்சி ஒளிர்ந்திருக்க
நெஞ்சில் நிலைக்கின்ற வண்ணம் பயணத்தில்
மெய்மறந்து சென்றிருந்தோம்! எல்லாம் விறுவிறுப்பாய்த்
தொய்வின்றி அள்ளிவைத்த பாலாவை வாழ்த்துவோம்!
வெள்ளிதோறும் கேட்போம் விழைந்து
திரு.ஸ்ரீதரன் மதுசூதனன் உரை
சங்க இலக்கியத்தைச் சொன்னதைக் காட்டிலும்
சொன்னதற்குக் காரணங்கள் தந்த அணுகுமுறை
என்றும் நிலைக்கும் தொடரும் பலருமிங்கே
சங்கமேடை தன்னை வடிவமைத்துப் பேசுவார்!
தன்கருத்தை வைத்தார் முனைந்து.
பேரா.பெருமாள் முருகன் உரை
பழகு தமிழில் எளிமையாய்ப் பேசி
அழகாக சங்கச் சுரங்கம் அரங்கில்
உலவிடச் செய்தேதான் ஆவண மாக்கித்
துலங்கிடச் செய்தவர் பாலாதான் என்று
வழங்கினார் வாழ்த்துகளைத் தான்.
தோழர் ச.தமிழ்ச்செல்வன் உரை
சங்ககாலம் காட்டும் நிகழ்வைச் சமகாலம்
இன்றிங்கே காணும் நிகழ்வுடன் ஒப்பிட்டுத்
தந்த அணுகுமுறை முற்றும் புதுமைதான்!
இன்னும் தொடர்வதற்கு வாழ்த்துகிறேன்
சொல்லட்டும்
என்றார் மகிழ்ச்சியுடன் பார்த்து.
பாலா உரையில் தனக்குத் தமிழ்த்திசையைக்
காட்டிப் பயணம் தொடங்கப் பெருந்தலைவர்
காமராசர் காரணம் என்றுரைத்தார். நன்றியுடன்!
பாலா தொடரட்டும் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
இணையப்பத்து-- முதலாம் பத்து குறித்த
கலந்துரையாடல்
31.07.20
சங்கச் சுரங்கம் முதல்பத்து வெள்ளிகள்
தங்கமாய் வைரமாய் வைடூ ரியங்களாய்
சங்க இலக்கியக் காட்சி ஒளிர்ந்திருக்க
நெஞ்சில் நிலைக்கின்ற வண்ணம் பயணத்தில்
மெய்மறந்து சென்றிருந்தோம்! எல்லாம் விறுவிறுப்பாய்த்
தொய்வின்றி அள்ளிவைத்த பாலாவை வாழ்த்துவோம்!
வெள்ளிதோறும் கேட்போம் விழைந்து
திரு.ஸ்ரீதரன் மதுசூதனன் உரை
சங்க இலக்கியத்தைச் சொன்னதைக் காட்டிலும்
சொன்னதற்குக் காரணங்கள் தந்த அணுகுமுறை
என்றும் நிலைக்கும் தொடரும் பலருமிங்கே
சங்கமேடை தன்னை வடிவமைத்துப் பேசுவார்!
தன்கருத்தை வைத்தார் முனைந்து.
பேரா.பெருமாள் முருகன் உரை
பழகு தமிழில் எளிமையாய்ப் பேசி
அழகாக சங்கச் சுரங்கம் அரங்கில்
உலவிடச் செய்தேதான் ஆவண மாக்கித்
துலங்கிடச் செய்தவர் பாலாதான் என்று
வழங்கினார் வாழ்த்துகளைத் தான்.
தோழர் ச.தமிழ்ச்செல்வன் உரை
சங்ககாலம் காட்டும் நிகழ்வைச் சமகாலம்
இன்றிங்கே காணும் நிகழ்வுடன் ஒப்பிட்டுத்
தந்த அணுகுமுறை முற்றும் புதுமைதான்!
இன்னும் தொடர்வதற்கு வாழ்த்துகிறேன்
சொல்லட்டும்
என்றார் மகிழ்ச்சியுடன் பார்த்து.
பாலா உரையில் தனக்குத் தமிழ்த்திசையைக்
காட்டிப் பயணம் தொடங்கப் பெருந்தலைவர்
காமராசர் காரணம் என்றுரைத்தார். நன்றியுடன்!
பாலா தொடரட்டும் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home