குருமா குழம்பு
குருமாக் குழம்பு
உருளைக்கி ழங்கு, புடலங்காய், வாழை
முருங்கைக்காய், முள்ளங்கி, கத்திரி நூல்கோலும்
உருண்டையாய் டர்னிப்பு, காயொன்றப் போட்டு
குருமா குழம்பினை வைக்கலாம் வாகாய்!
குருமா மணமே மணம்.
செய்முறை
பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றியே பட்டையுடன்
சோம்பு கிராம்புதனைச் சேர்த்துப் பொறித்ததும்
வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்!
பச்சை மிளகாயும் பூண்டுடன் இஞ்சியும்
கொஞ்சம் கருவேப் பிலையுடன் காய்சேர்த்து
நன்கு வதக்கி தனியா பொடியுடன்
மஞ்சள் மிளகாய்ப் பொடிசேர்த்து உப்புடன்
தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிட்டு காய்களோ
வெந்ததும் தேங்கா, கசகசா, முந்திரியை
நன்கு அரைத்து கலந்து கொதிக்கவிட்டு
கொத்தமல்லி தூவியே நெய்விட்டுப் பாருங்கள்
அப்பாடி! அங்கே குருமா தயார்தான்!
அப்படியே ஊற்றிச் சோறில் பிசைந்தேதான்
இப்போதே சாப்பிடுங்கள் பார்த்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home