Monday, June 28, 2021

சம்பந்தி இராம களஞ்சியம் அவர்கள் காலமானார்


 சம்பந்தி இராம களஞ்சியம் அவர்கள் காலமானார்!

27.06.21 ஊர் புளியங்குடி

வணங்குவோம் நினைந்து.

கள்ளங் கபடமின்றி உள்ளத்தில் உள்ளதை

உள்ளவாறு சொல்வார் இராம களஞ்சியம்!

வெள்ளந்தி யானவர் அன்பாய்ப் பழகுவார்!

பிள்ளைக் குணமுடைய  புன்னகைப் பண்பாளர்!

நல்லவரை நாளும் வணங்கு.


அவர் சொன்ன உவமை!

25.07.2019

குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் சிந்தும்

அழகுப் பருக்கைகள் பார்ப்பதற்கு விண்ணில்

ஒளிர்கின்ற நட்சத் திரங்களைப் போல

உளதென்றார் தாத்தா ரசித்து.


பரபரப்பாய் வாழ்ந்தவர் பட்டென்றே சென்றார்!

குடும்பமும் சுற்றமும்  ஏங்கிநிற்கச் சென்றார்!

மருத்துவராய்த் தொண்டாற்றி மாண்புடன் வாழ்ந்தே

கருத்தாய்க் கடமைகள் ஆற்றியவர் எங்கே?

நிரந்தர மற்றது வாழ்வு.

(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:336)

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகென்றார் அய்யன்!

இருந்தவர் இன்றோ இறந்தவர் ஆனார்!

இருப்போர்கள் வாழ்வோம் நினைந்து.


மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home