குறுந்தொகை 158
குறுந்தொகை 158
பாடல்:
நெடுவரை மருங்கிற் பாம்புபட இடிக்கும்
கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மாமழை
ஆரளி யிலையோ நீயே பேரிசை
இமயமும் துளக்கும் பண்பினை
துணையிலர் அளியர் பெண்டிர் இஃதெவனோ.
கவிதை:
தலைவன் தினந்தோறும் தேடி வருவான்!
மழைவேறு பெய்கிறது! என்தலைவன்
பார்க்க
வருவாரோ? வந்துவிட்டார்! கேட்கட்டும் இங்கே!
மலையருகே பாம்புகள் ஓட இடியும்
சுழன்றடிக்கும் காற்றும் கலந்த மழையே!
பெரிய இமய மலையைத் தாக்கும் வலிமை உனக்குண்டு! இப்படிப் பெய்து
துணையெண்ணி வாழ்வோரை வாட்டுகின்றாய்! ஏனோ?
வருவாரோ என்றஞ்சி நின்றிருந்தேன் இங்கு!
இரக்கமே இல்லையா? சொல்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home