தம்பி பாபு (எ) பாலகிருஷ்ணனுக்கு வயது 70/71
தம்பி பாபு (எ) பாலகிருஷ்ணனுக்கு வயது 70/71
02.09.21
இல்லற முத்துக்கள்:
மனைவி B.ஷீலா
மருமகன்: K.கார்த்திகேயன்
மகள் N.B. தீபலட்சுமி
பேத்தி: K. கார்விதா
தம்பி எழுபதை இங்கே நிறைவுசெய்து
இன்றோ எழுபத்து ஒன்றில் தடம்பதிக்கும்
பொன்னான நன்னாள்! இந்தநாள்! இன்பநாள்!
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.
மதுரையின் சொக்கிக் குளத்திலே தாத்தா
எடுப்பாக பாட்டியுடன் நன்றாக வாழ்ந்தார்!
மதுரைமில்லில் அக்காலம் மெச்சும் பணியைப்
புகழுடன் பார்த்தார் சிறந்து.
சித்தப்பா டீக்காராம் ஏற்றார் மதுரைமில்
முத்தான நற்பணியை! பன்முக ஆற்றலுடன்
சித்தியின் ஊக்கமுடன் முன்னேறி வாழ்ந்தவர்!
பற்றுடன் போற்றி வணங்கு.
பாபு, மதுரைமில்லில் தொண்டாற்றி
அப்பணியில்
நாடுபோற்ற நற்பெயர் ஈட்டி பணிநிறைவைப்
பாசமுடன் ஏற்றே வாழ்கின்றார் கோவையில்!
நேசமுடன் வாழ்கபல் லாண்டு.
மனைவி மகளும் மருமகனும் பேத்தி
இணந்திருக்க மங்களமாய் வாழ்கின்றார் தம்பி!
மனநிறைவில் வாழ்வாங்கு வாழ்க மகிழ்ந்து!
அனைவரும் வாழ்கபல் லாண்டு.
குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச
சிறப்புடன் வாழ்க! வளமுடன் வாழ்க!
நிறைவுடன் வாழ்க! நலமுடன் வாழ்க!
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home