சுமையெல்லாம் என்னோடு!
சுமையெல்லாம் என்னோடு!
என் சுமையை நான்தானே சுமக்கவேண்டும்!
எப்படித்தான் என்றாலும் நான்தானே வாழவேண்டும்!
அழுதாலும் புரண்டாலும் நிலைமைதான் மாறுமா?
யாரென்ன சொன்னாலும் ஆறுதல்தான் கிடைக்குமா?
எல்லோரும் வருவார்கள் ஏதேதோ சொல்வார்கள்?
சொல்வதெல்லாம் கேட்டாலும் தீருமா
சிக்கல்கள்?
என்னென்ன காரணங்கள் எப்படித்தான் சொன்னாலும்
என்றிங்கே நிலைமாற?
என்றிங்கே அமைதிகாண?
வேதனையும் சோதனையும்
தொடர்கதையாய் மாறிவர
ஆழியலை அடங்கிவிட்ட
நிலைபோல ஆகிவிட்டேன்!
காற்றடிக்கும் திசையெல்லாம்
காகிதமாய் மாறிவிட்டேன்!
பறக்கின்றேன் பறக்கின்றேன்
திசையறியாப் பறவைபோல்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home