Saturday, October 02, 2021

பேத்தி திருமணத்தில் தாத்தா பாட்டி

 திருமண மண்டபத்தில் காட்சி!


திருமண இணையர்!


தாத்தா பாட்டி!


பேத்தி திருமணத்தைப் பார்த்த மகிழ்ச்சியில்

தாத்தாவும் பாட்டியும் புன்னகை பூத்தேதான்

ஊற்றெடுக்கும் பூரிப்பில் மண்டபத்தில் பார்த்திருந்தார்!

காட்சிகளைக் கண்டிருந்தார் அங்கு.


அம்மா அப்பா!


மகளின் திருமணத்தை முன்நின்று போற்றி

அகநிறைவு கொண்ட கடமை உணர்வில்

முகமலர் பூத்த சிரிப்பிலே அங்கே

நடந்தார் பரபரப்பாய்த் தான்.


நண்பர்கள்


நற்றமிழில் வாழ்த்திசைத்து நட்பு மணங்கமழ

சுற்றம்போல் சூழ்ந்தேதான் கேலியும் கிண்டலுமாய்

என்னவோ பேசிச் சிரிக்கவைத்தார் மெய்மறந்து!

பண்பில் வெடித்தது நட்பு.


உற்றார் உறவினர்


எத்தனை நாளாச்சுப் பார்த்தேதான்! ஏக்கத்தைப்

பிட்டுவைத்தார் பேசிப் பழகி உறவினர்கள்!

சுற்றிவந்தார் பிள்ளைகள் அங்கே அணியணியாய்!

இத்தகைய காட்சிகள் எங்கும் நிறைந்திருக்க

முற்றும் கலகலப்பே தான்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home