Monday, June 26, 2023

ஐயா வைகுண்டநாதர்


அப்பா தெய்வத்திரு இராம களஞ்சியம் ஐயா அவர்கள் என்னை ஐயா வைகுணரட்நாதரைப்பற்றி கவிதை எழுதச் சொல்லி அன்புக் கட்டளை இட்டார். அது நிவேறாமல் என் மனதை உறுத்தியது. இன்றுதான் எழுதினேன். சம்பந்தி இராமகளஞ்சியம் ஐயாவை வணங்கி வழிபடுகின்றேன்.

ஐயா வைகுண்ட நாதரைப் போற்று!


திருச்செந்தூர் மாக்கடலில் தானாகத் தோன்றி

உருகாட்டி வந்தவர் வைகுண்ட நாதர்

பெருமையை எண்ணி வழிபட்டு வாழும்

பெரும்புகழ் கொண்டதிந்த நாடு.


சாதிமத வேறுபாடே இல்லாமல் மக்களை

மேதினியில் அங்கே கிணற்றில் குளிக்கவைத்தார்!

ஈடில்லா வண்ணம் சமபந்தி ஏற்பாட்டில்

பேதமின்றி உண்ண அறிவுறுத்தி போதித்தார்!

போதனைகள் அறநெறிதான் வாழ்த்து.


தாழக் கிடப்பாரைத் தற்காத்தல் தர்மமென்று

கோட்பாட்டை முன்வைத்தே எல்லாச் செயல்களையும்

போற்றினார் ஐயாதான் இங்கு.


மானுடம் காக்கவந்த இந்த மகானுக்கோ

ஈனமனம் கொண்டவர்கள் இன்னலை

தந்தார்கள்!

தேன்மன ஐயாவின் நற்பண்பால் சந்தித்தே

பாமணக்க வாழ்ந்தாரே இங்கு.


தர்மயுக மக்களாக மாற அறிவுரைகள்

தந்தேதான் வாழவைத்தார் நன்கு.

வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம்திங்கட்கிழமையில் வைகுண்டம்சென்றார்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home