வாழ்க்கை விளையாட்டா?
வாழ்க்கை விளையாட்டா?
வாழ்க்கை! உயிரோட்டம் கொண்ட குடும்பத்தை
சேர்த்தேதான் பண்புகளால் கட்டமைக்கும் கூட்டமைப்பு!
நாள்தோறும் நல்ல ஒழுக்கத்தைப் பின்பற்றி
தாய்தந்தை பிள்ளைகள் பாட்டிதாத்தா
என்றேதான்
ஆலமரம் காணும் விழுதுகளாய் ஏற்படும்
கால உறவுகளின் பின்னலாகும் இல்லறம்!
பால இணைப்பே உறவு.
ஊரை உறவுகளைக் கூட்டி உறுதிசெய்து
பாரில் விருந்துவைத்துப் பாங்காய்த் திருமண
நாள்வரும் முன்னேயே பெண்வீட்டார் ஆண்வீட்டார்
காரணம் இன்றி நிறுத்துகின்றார் மன்றலை!
யாரிடம் நோவது நாம்?
திருமணம் காண்பதற்குக் கூடுகின்ற போது
மணமகளோ இல்லை மணமகனோ சொல்வார்
மணத்தில் உடன்பாடே இல்லைதான் என்றே!
மணக்குழப்பம்! காணவந்து கூடிநிற்கும் மக்கள்
மனக்குழப்பம்! எல்லோரும் காவல் நிலையம்
சமரசம் என்றே அலைவார்! கலைவார்!
விளையாட்டாய்ப் பேனதோ வாழ்வு?
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home