Saturday, September 30, 2023

மதுரக்காரன் பாடல்

 மதுரக்காரன் பாரடா!


ஏடா ஏடா ஏடா

நான் மதுரக் காரன் தாண்டா


கீழடியே தமிழன் 

வரலாற்றைச் சொல்லும்!


தூங்கா நகரம் என்று

ஊரு உலகம் சொல்லும்


தமிழ்ச்சங்கம் கண்டோம்

தலைநிமிர்ந்து நின்றோம்


மீனாட்சி கோயில்

தெப்பக்குளம் உண்டு


அழகர் கோயில் அழகை

பார்த்து ரசிக்க வேணும்


யானை மலை திருப்பரங்

குன்றம் கொண்ட நகரம்


ஆறுபடை வீட்டில் 

இரண்டு உண்டு இங்கே!


பள்ளிகளும் உண்டு

கல்லூரி உண்டு

தொழிற் சாலை உண்டு

மருத்துவமும் உண்டு


வைகை ஆறு உண்டு 

புராணக் கதை உண்டு!


சித்திரை மாதம் இங்கே

திருவிழாதான் உண்டு!


நாலு மாசி வீதி

தேரோட்டம் உண்டு!


ஜிகர்தண்டா பானம்

மதுரை சிறப்ப சொல்லும்


அந்தத்  தலைப்புலதான்

திரைப்படமும் உண்டு


எல்லா மதமும் உண்டு

ஒற்றுமையும் உண்டு


அந்தந்த மதங்களுக்கு

கோயில் குளம் உண்டு


மனித நேயம் கொண்டு

பழகுவது உண்டு


மதுரக் காரன் என்றால்

தனிப்பெருமை உண்டு


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home