நல்லதோர் வீணை
பாபாஜி அவர்கள் பன்முகத் திறனுடைய எளிமை போற்றும் புலவர் பெருந்தகை...தென்.கி.
ஐயாவின் வாழ்த்து
RAJENDRAN CHOKALINGAM:
அருமையான கருத்துக் கவிதை. ஆண் மகனால் எளிதில் ஏற்க முடியாத அனைத்துப் பாத்திரங்களாகவும் மிளிரும் வாழ்க்கைத் துணைவி பல ஒளிக்கதிர்களை வெளிப்படுத்தும் வைரம் தான். மண வாழ்வின் முதிர் பருவத்தில் தான் நம்மால் இதை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள முடிகிறது. அதன்பின் ஈருடல் ஓர் உயிரே. பாரதியின் பாடலை எவ்வளவு ஆழமாகக் கற்றாலும் அவரவர் வாழ்ந்து பாராமல் எவரும் இவ்வுண்மையை ஏற்பதில்லை. மேலும் வைரம் மிளிர ஒளி வேண்டும். ஒளி போல் கணவனும் இயைந்து வாழ வேண்டும். வாழ்க்கை இரு கை ஓசை, இரட்டை மாட்டு வண்டி ,புகை வண்டித் தண்டவாளம், காற்றும் குழலும் போல் இசைவாக அமைய வேண்டும். ஒன்று மாறினால் அனைத்தும் வீணே. ஆணுக்கும் சரி பாதி பொறுப்புண்டு. நல்லதோர் வீணையும் திறமையான விரல் மீட்டினால்தான் நாதம் விளைவிக்கும். மிகச் சிறந்த வாழ்க்கை அருமையான வீணைக் கச்சேரியே.

07.03.24
மதுரை பாபாராஜ்:
மிக்க நன்றி ஐயா. தங்கள் கருத்தே எனக்குப் பொற்கிழி கிடைத்ததைப் போலாகும்.

0 Comments:
Post a Comment
<< Home