பிரசாந்த் மருத்துவமனை
info@prashanthhospitals.org
பிரசாந்த் மருத்துவ மனை! வேளச்சேரி
PRASHANTH HOSPITALS,VELACHERY
DR ANANTHA KRISHNAN TEAM
மருத்துவர்கள்- செவிலியர்கள்- ஊழியர்கள்- துப்புரவுத் தொழிலாளர்கள் குழுவினர்!
அறை எண்:1015A -- B.வசந்தா
பல்வேறு ஊர்களைச் சார்ந்தவர்கள் எல்லோரும்
பல்வகை நோயைக் குணமாக்கும் தொண்டிலே
நல்ல மருத்துவக் கூடத்தில் சேர்கின்றார்!
வல்லமையோ(டு) ஆற்றலைக் காட்டுகின்றார் வாழ்த்துகின்றோம்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
குழுஉணர்வு மற்றும் கடமை உணர்வால்
நலம்பெற வைப்பதை வாழ்த்து.
சிரித்த முகமும் சினங்கொள்ளாப் பண்பும்
மனிதநேயப் பண்புகளாம்! அத்தகைய பண்பைக்
கனிவுடன் அன்பையும் சேர்த்தேதான் நோயைக்
குணப்படுத்து கின்றார்கள் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
21.07.24
0 Comments:
Post a Comment
<< Home