நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
மிடுக்கெல்லாம் போகும்!
திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு
தடையின்றிப் போனால் உடையும் நகையும்
உடலுக்(கு) அழகாகும்! நோய்வந்து மொய்த்தே
தடைகளை ஏற்படுத்தி விட்டால் படுத்த
படுக்கையில் மெய்மறப்போம் நாளும் துடித்து!
மிடுக்கெல்லாம் போகும் துவண்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home