Monday, August 19, 2024

அழுகின்றேன்

 காய்ந்த கொடியானாள் வசந்தா!


என்னவளை எண்ணியெண்ணி அழுகின்றேன்!

வசந்தாவை எண்ணி அழுகின்றேன்!


அழுகின்றேன் அழுகின்றேன்

தனிமையிலே அழுகின்றேன்!


என்னவளின் இன்னலைப்

பார்க்க முடியவில்லை

அழுகின்றேன்!


அவளுக்குச் சாப்பிட முடியவில்லை!

அவளுக்குப் பேசப் பிடிக்கவில்லை!


குமட்டுகின்றாள் கொஞ்சமாக 

சாப்பிட முயல்கின்றாள்


திரும்பிப் படுக்க முடியவில்லை

உட்கார முடியவில்லை

நிற்க முடியவில்லை

நடக்க முடியவில்லை!


அவளது தவிப்பைப் பார்க்க முடியாமல்

அழுகின்றேன் அழுகின்றேன் அழுகின்றேன்!


அன்பையெண்ணி அழுகின்றேன்!

ஆற்றாமையில் அழுகின்றேன்!

இயலாமையில் அழுகின்றேன்!

ஈனசுரம் கேட்டே அழுகின்றேன்!

உருக்குலைந்த தோற்றங்கண்டே அழுகின்றேன்!

ஊருக்கே உணவளித்த வசந்தாவை எண்ணி அழுகின்றேன்!

எனக்காக வாழ்ந்தவளை எண்ணி அழுகின்றேன்!

ஏங்கி ஏங்கி இன்றிங்கே அழுகின்றேன்!

ஐம்புலனும் அமைதியான கோலங்கண்டே அழுகின்றேன்!

ஒடுங்கிவிட்டாள்! பார்த்தே அழுகின்றேன்!

ஓவென்று கதறவேண்டும்! முடியாமல் அழுகின்றேன்!

ஔவா என்றதும் சிரிப்பாளே!

அதையெண்ணி அழுகின்றேன்!!


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home