வண்ணமயில் கோலம்
நிலைப்படியில் தோரணம்--
வாசலில் வண்ணமயில்
கோலம்!
கைவண்ணம்:
செல்வி.சத்யப்பிரியா
நிலைப்படியில் செவ்வந்திப் பூக்கள் இடையே
பளபளக்கும் குண்டுபாசி வைத்தேதான் கட்டி
அழகான தோரணத்தைத் தொங்கவிட்ட பண்பில்
கலைவண்ணம் பாடுதே இங்கு.
வண்ணமயில் தோகையெல்லாம் பூக்கள் மலர்ந்திருக்க
வண்ண விளக்கொளியை அந்தமயில் பார்த்திருக்க
அன்பாய் மகிழ்ச்சியான தீபா வளிவாழ்த்தை
எண்ணங் கவர்கின்ற கோலத்தால் ஓவியமாய்க்
கொண்டுவந்த சத்யப் பிரியாவின் ஆற்றலை
வண்டமிழால் வாழ்த்துகிறோம் இன்று.
மதுரை பாபாராஜ்
வசந்தா
0 Comments:
Post a Comment
<< Home