Mahatma Gandhi
Seven Deadly Sins
1wealth without work
2 pleasure without conscience
3 science without humanity
4 knowledge without character
5 politics without principle
6 commerce without morality
7 worship without sacrifice
Mahatma Gandhi
முனைவர் சங்கரசரவணன் அனுப்பியதற்குக்
கவிதை: மதுரை பாபாராஜ்
ஆங்கில மூலம்: மகாத்மா காந்தி
உழைப்பற்ற செல்வம்! மனசாட்சி யற்றுக்
களிக்கின்ற இன்பம்! மனிதநேய மற்ற
அறிவியல்! பண்பற்றுக் கற்ற அறிவு!
நெறியின்றி போற்றும் அரசியல்! நேர்மைத்
தெளிவற்றுச் செய்யும் வணிகம்! தியாக
உணர்வின்றிப் போற்றும். வழிபாடு! என்னும்
இவையேழும் வாழ்வில் கொடியபா வங்கள்!
புவியே இகழும் உணர்ந்து.
-------------------------------------------------------------------
0 Comments:
Post a Comment
<< Home