CR அனுப்பிய படம்
குறள்குரிசில் CR அனுப்பிய படத்திற்குக் கவிதை!
காந்தி ஆசிரமம்! திருச்செங் கோடு! ராஜாஜி தங்கிய பெருமை கொண்டது!
வாழ்க்கை வசதி எளிமையாய் உள்ளவை!
காந்தி பெயரிலே ஆசிரமம்! ராஜாஜி
ஆசிரமந் தன்னிலே தங்கிய நாள்களோ
நேசமுடன் இங்கே வரலாறாய் ஆனதே!
வேடமற்ற வாழ்வை வணங்கு.
ஓட்டுவீடு முன்னால் சிமெண்ட்டாலே பெஞ்சுவைத்தார்!
வீட்டுக் கெதிரில் துளசிமாடம் ஆகாகா!
வீட்டையே சுற்றி மரநிழல் அட்டகாசம்!
காட்சி நகரிலுண்டோ? சொல்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home