மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!
மனச்சோர்வில் வாழ்ந்தால் கடந்தகாலந் தன்னில்
உழல்கின்றீர் என்று பொருளாம்! பதட்டம்
சுழலத்தான் வாழ்ந்தால் எதிர்காலத் தோடு
நிழல்யுத்தம் என்றே பொருளாம்! அமைதி
தவழ்ந்தால் நிகழ்காலந் தன்னிலே வாழும்
மனநிலை என்றே பொருள்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home