நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
நம்முடைய நேர்மறைச் சிந்தனைகள் வாழ்க்கையில்
நம்முடைய நண்பர்க ளாவர்! அவைகளோ
உங்களை நாளும் அமைதியாய் வாழவும்
உங்கள் உளைச்சல் களைப்பைக் குறைக்கவும்
என்றும் உதவும்! நலங்காக்கும்! நேர்மறைச்
சிந்தனையைப் பின்பற்றி என்றும் மகிழ்ச்சியாக
இங்குவாழ்தல் நன்று! உணர்.
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home