Thursday, June 05, 2025

நண்பர் கிருஷ்ணமூர்த்தி இராமாநுஜன்

இருவரையும் ஒரு சேரக் காண்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது..🥰

கம்பரும் கம்பரும் கை குலுக்கிக் கொண்ட தருணம்😃
CR


 இன்று வீட்டுக்கு வருகை தந்த மகிழ்வான தருணம்:

நண்பர் திரு கிருஷ்ணமூர்த்தி இராமாநுஜன் அவர்களின் அன்பளிப்பு:

மகள்வீட்டு மாங்கனி முப்பால்போல் மூன்றை

அகங்குளிர அன்பளிப்பாய்த் தந்தார்! மகிழ்ந்து!

அகநக நட்பை உணர்ந்தேன்! உவந்தேன்!

மகத்தாக வாழ்க வளர்ந்து.

மதுரை பாபாராஜ்

இன்று மதுரைபாபாராஜ் ஐயா அவர்கள் வீட்டிற்கு சென்று அளவளாவினோம். மிக்க மகிழ்ச்சி மிக்க தருணம். குளம்பி தந்து உபசரித்தார்.
அவர் எழுதிய புத்தகங்கள் சிலவற்றை அன்பளிப்பாக தந்தார்.மிக்க நன்றி.🌺🌹❤️☘🍊🫀

கிருஷ்ணமூர்த்தி இராமாநுஜன்

நண்பர் இராமா நுஜன் தந்த தித்திக்கும் மாங்கனிகள்!

மாவும் பலாவுடன் வாழையும் முக்கனிகள்!

மாங்கனி தந்தார் இராமா நுஜனார்தான்!

மாங்கனி தித்திப்பு கம்பன் தமிழ்போல!

ஈங்களித்தேன் நன்றி மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

Vovkaniankrishnan:
பார்வை ஒன்றே போதும்

பாபாவிற்குப் பாட்டெழுத!!

தென்.கி


Swaminthan Swaminathan:
கம்பன் கண்டுள்ளோம்!
முழுவதும் இரசித்து
உண்டதில்லை!
மாங்கனிகள் காண்கிறோம்!
சிறிதும் ருசித்துப் புசிக்கவில்லை!

எட்டாக் கனிகள்! ஆனால்,
புளிக்க வில்லை!

கனி கந்தனுக்கே கிடைக்க வில்லையா ம்!
ஞான முதல்வனுக்கே ஞால முதல்வன் அருளினானாம்!

கனி வெறுங்கனி அல்ல!
ஞானக் கனி! "மா ங்"கனி!

கனி நீங்கள் உண்டால்,
ஞானக் கவி நாங்கள் பெறுவோம்!
சு ப சு.



0 Comments:

Post a Comment

<< Home