Sunday, June 01, 2025

மீண்டெழுந்தேன்

 மீண்டெழுந்தேன்!

1995- அக்டோபர்!

தந்தை இருக்குமட்டும் வாழ்வில் சுமையில்லை!

தந்தை இறந்தபின்னே வாழ்வின் சுமையறிந்தேன்!

அன்றாட வாழ்வை நகர்த்த கடன்பெற்றேன்!

நண்பர்கள் செய்த உதவி மறக்கமாட்டேன்!

பென்னர் பணியைத் துறக்க முடிவுசெய்தேன்!

என்வாழ்க்கை கேள்விக் குறி?


GENERAL MANAGER MR.CN அவர்களுக்கு நன்றி:

மடலைக் கொடுத்ததும் மேலாளர் வாங்கிப்

படித்தார்! அதிர்ந்தார்! பெருமூச்சு விட்டார்!

திருப்பிக் கொடுத்துவிட்டு உங்களுக்கு மாற்றம்

தருகிறேன் என்றார்! சரியென்றேன் வந்தேன்! 

சருகு தழைப்பதற்கு வாய்ப்பு.


VICE PRESIDENT MR.ARC அவர்களுக்கு நன்றி:

சென்னைக்குப் போங்களென்றே அன்புடனே என்னையோ

அன்று இருவரும் சொன்னதால் சென்னையில்

என்வாழ்க்கை நன்கு தொடர்ந்தது! வாழ்கின்றேன்!

என்வாழ்வில் மீண்டெழ வாய்ப்பு.


காலத்தே இந்த உதவியைச் செய்ததாலே

வாழ்க்கையில் மீண்டெழுந்தேன் நான்.

என்றும் நன்றியுடன்

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home