Thursday, May 29, 2025

தங்கைக்கு வாழ்த்து


 தங்கை ராஜி ஜோதிகுமார் குடும்பத்தாருக்கு வாழ்த்து!

நாள் 29.05.1975 --29.05.2025

கேக்குடன் பூங்கொத்தும் எங்கள் படத்திற்கு

ஏற்றாற்போல்  மின்விளக்கு மின்னொளி தந்தேதான்

ஊற்றெடுக்கும் பொன்விழா வாழ்த்துகளை அன்புடனே

தங்கைக் குடும்பத்தார் காட்டிவிட்டார் வாழ்த்துகிறோம்!

நன்றி நவில்கின்றோம் இன்று.


பாவா வுடனிங்கே வாழ்ந்தநாளை எண்ணித்தான் 

வாழ்கின்றார் என்தங்கை! பொன்விழா கண்டுவிட்டார்!

பாங்குடனே பிள்ளைகள் தங்கள் குடும்பத்தை

தாங்குகின்றார் ஆற்றலுடன்! வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home