புலால் மறுத்தல்-- 26
------------------------------------------------------
புலால் மறுத்தல்-- 26
----------------------------------------------------------
நமது உடலின் வளர்ச்சிக்கு
மற்றொரு உடலைப் புசிப்பவனின்
நெஞ்சில் கருணை இருக்காது!
உள்ளத்தில் அருளும் இருக்காது!
இரக்கம் கொடுக்கும் நற்பயனோ
இறைச்சி உண்பவர்க் கில்லையம்மா!
வன்முறை கொண்ட உள்ளத்தில்
இரக்கமோ துளியும் இருக்காது!
உயிரைக் கொன்று தின்பவனின்
நெஞ்சில் அருளும் இருக்காது!
ஊனை உண்னல் பாவந்தான்!
உயிர்க்கொல் லாமை அறமாகும்!
புலாலை மறுத்தால் பிறஉயிர்கள்
உலகில் வாழும் வாய்ப்புண்டு!
சொர்க்கம் என்பது கிடையாது!
புலாலை வெறுக்கும் நிலையெடுத்தால்
விற்கும் தொழிலே இருக்காது!
இறைச்சி, உயிரின் புண்ணாகும்!
உண்பதை அறவே ஒழிக்கவேண்டும்!
உயிரைப் பிரிந்த உடல்தன்னை
அறிவுடை யோர்கள் உண்ணமாட்டார்!
ஆயிரம் யாகங்கள் செய்வதினும்
உயிரைக் கொன்று உண்ணாமல்
வாழ்வதே என்றும் மேலாகும்!
புலாலை வெறுக்கும் மாந்தரையோ
புவியே வணங்கும் கைகூப்பி!
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home