பூவின் பருவங்களும் வாழ்வின் பருவங்களும்
பூவின் பருவங்களும் வாழ்வின் பருவங்களும்!
அரும்பு (Anumbu): பூவின் முதல் நிலை - செடியில் தோன்றும் மிகச்சிறிய நிலை.
பிறந்த நிலையில் குழந்தை நிலைதான்
அரும்பாகும்! ஆர்வத் துடனேதான் சூழ்ந்து
அழுதேதான் கைகால் உதறும் அழகை
விழிகளால் காண்பார் ரசித்து.
மொட்டு (Mottu): அரும்பு சற்று பெரியதாக வளர்ந்த நிலை.
பாட்டி முதலானோர் உச்சிமோந்து
பாதுகாத்து
நாளும் வளர்ப்பார் மகிழ்ந்து.
முகை (Mukai): மொட்டு விரிந்து மலரும் நிலைக்கு முந்தைய பருவம், நறுமணம் வீசத் தொடங்கும் நிலை.
நறுமணம் வீச பொருளை உடலில்
துறுதுறுக் கண்கள் விழிக்கவே பூசி
நிறைவுடன் பார்த்திருப்பார் சூழ்ந்து.
மலர் (Malar): இதழ்கள் விரிந்து முழுமையாக பூத்த நிலை.
பருவ வயதடைந்தே பக்குவம் கண்டே
அரும்பிடும் நாணமுடன் பெண்மை சிரிக்கும்!
செருக்குடன் ஆணோ தலைநிமிர்ந்து பார்ப்பான்!
பருவம் முழுமைதான் பார்.
அலர் (Alar): பூ நன்றாக விரிந்து இதழ்கள் வளைந்த நிலை.
.இளமை முதலாய் முதுமை வரைக்கும்
களைகட்டும் வாழ்க்கைப் பருவமாகும் இங்கு!
நிலையென்றே எண்ணித்தான் ஏமாந்தே நிற்போம்!
உலகில் கொதிப்போம் களைத்து
வீ (Vee): பூ வாடி, செடியிலிருந்து உதிரும் நிலை.
நோய்நொடிகள் தாக்க முதுமையில் தள்ளாடி
வாழ்வைக் கடந்துவந்த பாதை அசைபோட
நாளும் கழிப்பதே இங்கே கவலையாக
வீடே சுமையாகும் இங்கு.
செம்மல் (Semmal): பூ கீழே உதிர்ந்து காய்ந்துபோன நிலை.
ஒளிவிளக்காய் வாழ்ந்து விழுந்தே இருளில்
ஒளியிழந்து என்று இறுதிப் பயணம்
தெரியுமோ என்றேதான் காத்திருப்போம்! நாம்தான்!
தெரியாமல் சென்றிடுவோம் நாம்.
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home