Monday, August 31, 2026

சிறுபாணாற்றுப்படை

 [31/08, 09:30] Madurai Babaraj: சிறுபாணாற்றுப்படை!

----------------------+------------

பூழி பூத்த புழல் காளாம்பி

ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண்

 மருங்குல்

வளைக்கை கிணை மகள் வள் உகிர்க்

 குறைத்த

குப்பை வேளை உப்பிலி வெந்ததை

மடவோர் காட்சி நாணிக் கடை அடைத்து

இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன்

 மிசையும்

அழி பசி வருத்தம் வீட………… (133-140)


கூரையில் வேய்ந்த மரச்சட்டம்

 காணவில்லை!

காரைச் சுவரைக் கறையான் அரித்ததால்

காளான் சுவரின் இடுக்கில்

 வளரந்திருக்க

சீரழகி என்மனைவி கையில்

 வளையலுடன்

கோரப் பசியால் வயிறு துடித்திருக்க

கீரையை அங்கே கைநகங்

 கொண்டேதான் 

ஆரணங்கு பார்த்துப் பறித்தேதான்

 வேகவைத்தாள்

பாவமாய் உப்பின்றி உண்ணும் பரிதாப

ஏழ்மை நிலையை மற்றவர்கள் பாராமல்

கூர்மதியாள் அங்கே கதவைத்தான்

 மூடினாள்!

பால்முகம் வாட உறவுடன் உண்டிருந்தாள்!

ஏழ்மைக் கொடுமையைப் பார்.


மதுரை பாபாராஜ்

[31/08, 09:35] Madurai Babaraj: ChatGPT


Sirupāṇāṟṟuppaṭai — The Cruel Face of Poverty

No wooden frame remained beneath the roof!

The lime-washed walls, gnawed by white ants,

Had cracks where mushrooms grew unseen.

My graceful wife, her bangles on her arms,

Her slender frame trembling with terrible hunger,

Gathered greens from those very cracks,

Plucking them with the sharp nails of her hands;

She boiled them, poor soul, without a grain of salt.

Lest others should behold our wretched state,

Lest they should witness the shame of want,

The wise and tender-hearted woman

Quietly closed the door.

With her family she shared that meagre meal,

While the glow upon her milk-white face grew pale.

Behold the cruel misery of poverty—

How hunger can humble human dignity,

Yet how even in utter want

The heart still strives to preserve its pride.

— Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home