ஏந்தல் கலைஞரை வாழ்த்து
ஏந்தலை வாழ்த்து!
பகுத்தறிவிற் கொவ்வாத வற்றையோ
தள்ளித்
தொகுக்கின்ற ஆற்றலைக் கொண்ட
கலைஞர்
மகத்தாக வாழ்ந்தார்! தனித்தன்மை
கொண்டு
நடைபோட்ட ஏந்தலை வாழ்த்து.
நண்பராம் பாலுவின் நற்குடும்பம்
நம்கலைஞர்
அன்றுவாழ்ந்த இல்லத்தில் சென்றே
கலைஞரின்
கண்கவரும் அன்புச் சிலையுடன்
தாமெடுத்த
நல்ல படங்கண்டோம்! வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
சிறப்போ சிறப்பு!
சுருங்கச் சொல்லி
சிறக்கச் செய்தீர்!
கோ.இமயவரம்பன.



0 Comments:
Post a Comment
<< Home