குறளுக்கு வெண்பா வடிவில் விளக்கம்
குறிப்பு:அறத்துப்பால் நூல்வடிவில் தயாராக உள்ளது.
பொருட்பால் அச்சில் உள்ளது.
இன்பத்துப்பால் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
வாசகர் கருத்துக்களை வரவேற்கின்றேன்.
=============================================
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவளன் முதற்றே உலகு.
எழுத்தின் தொடக்கம் எழுச்சி அகரம்!
கழனி கவிபாடும் காட்சி--தழைக்கும்
உலகின் தொடக்கமே உண்மைக் கடவுள்!
விளம்பிய வள்ளுவமே வேர்
================================================
விசும்பின் துளிவீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
மேகம் மழைத்துளியைத் தூவாமல் சென்றால்
ராகம் இசைத்து ரசித்திருக்கும்--தாகமுடன்
நிற்கும் பசும்புல்லின் கூர்மை நுனிகளைச்
சுற்றிலும் காண்ப தரிது.
===================================================
உரன் என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து.
மனஉறுதி அங்குசத்தால் அய்ம்புலனை நாளும்
துணிவாய் அடக்கியாளும் தூயோன்--புனிதமான
வீட்டுலகைக் காணும் விதையாவான்!மண்ணகமே
போற்றிப் புகழும் புரிந்து.
======================================================
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொறாமை,புவியாசை,பொங்கிவரும் கோபம்
அடாதடி வன்சொற்கள் அம்மா!--நடுக்கும்
இவைநான்கும் இல்லாத பண்பே அறங்கள்!
புவியே வணங்கும் புகழ்ந்து.
=====================================================
0 Comments:
Post a Comment
<< Home