கன்னித்தமிழ்
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.
--------------------------------------------------
நற்றிணையில் மூழ்கிய நங்கையே! நீஎனக்குச்
சற்றே குறுந்தொகை தந்தால் மகிழ்ந்திடுவேன்!
அற்புத ஐங்குறு நூறாக நான்தருவேன்!
பத்தில் பதிற்றுப்பத் தின்மேல்நான் பற்றுவைத்தேன்!
அப்பப்பா அந்தக் குளம்படிச் சத்தமுடன்
சந்தப் பரிபாடல் ஆர்வமுடன் நான்படித்தேன்!
கற்றவர் போற்றும் கலியும்,அகம்புறம்
கட்டுவைத்தே எட்டுத் தொகையாக்கித் தந்துவிட்டேன்!
கற்கண்டே கன்னித் தமிழ்.
0 Comments:
Post a Comment
<< Home