Sunday, February 03, 2019

குழந்தைகளுக்குக் குறளமுதம்!

குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

அத்தை இங்கே வாங்க
குறளைச் சொல்லித் தாங்க

வந்துட் டேனே செல்லம்
அருமைக் குறள் வெல்லம்

எட்டு வகை குணங்களெல்லாம்
வாழ்க்கைக் கேற்ற ஒழுக்கங்கள்!

இதனை உயிராய் மதிப்பவர்கள்
உலவும் உயர்ந்த சான்றோராம்!

உலக மக்கள் போற்றுகின்ற
உயர்ந்த நெறிகள் கொண்டவராம்!

இப்படிப் பட்ட  உயர்ந்தோரை
வணங்க மறுத்து வாழ்வோர்க்கு

பொறிகள் ஐந்தும் இருந்தாலும்
கட்டுப் படுத்தும் திறனின்றி

சலனப் பட்டு வாழ்ந்திருந்தால்
அந்தப் புலன்கள் இருந்தாலும்

இயங்கா நிலைதான் கண்மணியே!
பகுத்தறி வோடு இயங்கவிடு!

சான்றோர் தன்னைப் பின்பற்று!
வாழ்க்கை இங்கே வளமாகும்!

பெருமை யோடு வாழ்வதற்குப்
பெரியோர் ஆசிகள் துணைபுரியும்!

0 Comments:

Post a Comment

<< Home