Sunday, April 07, 2019

குறளெங்கே போகிறது

நதி எங்கே போகிறது?
பாடலின் ராகம்!

குறளெங்கே போகிறது
வாழ்வியல் நோக்கி
வாழ்வெங்கே போகிறது
பொதுமுறை நோக்கி
முறையெங்கே போகிறது
ஒழுக்கத்தை நோக்கி
ஒழுங்கெங்கே போகிறது
உயர்வினை நோக்கி!  ( மீண்டும்)

பார்வைகள்  நூறுவரும்
குறள்கள் ஒன்று
கோணங்கள் நூறுவரும்
குறள்கள் ஒன்று
எண்ணங்கள் கோடிவரும்
குறள்கள் ஒன்று
கருத்துக்கள் கோடிவரும்
குறள்கள் ஒன்று!
இன்பங்கள் ஊறிவரும்
குறள்கள் ஒன்று!

குறளைத்தான் படிப்பதற்கு
ஏக்கம் ஏக்கம்
படிக்காத நாளெண்ணி
வெட்கம் வெட்கம்
குறளுக்குள் திரண்டுவரும்
இனிமை கண்டு
எல்லாமே திருக்குறளின்
இரண்டில் உண்டு!

இல்லறத்தில் நல்லறத்தை
வள்ளுவம் கூறும்
மாசின்றி வாழ்வதற்கு
வள்ளுவம் கூறும்
மனிதத்தைக்  காப்பதற்கு
வள்ளுவம் கூறும்
அனைத்துக்கும் தீர்வுகளை
வள்ளுவம் கூறும்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home