Saturday, November 30, 2019

உனக்குமட்டும்

என்வசந்தா எங்கே? அவளைத்தான் காணவில்லை!
புன்னகை பூப்பாள்! சிரிப்பாள் முகம்மலர!
என்னமாய்ப் பேசுவாள் உற்சாகம் கொப்பளிக்க!
கண்கள் மலர்வாள் மகிழ்ந்து.

சோர்வென்றால் என்னவிலை என்பாள்! சுறுசுறுப்போ
ஆர்வமுடன் தேடி  இவளிடம் கற்கவரும்!
ஊர்ப்பயணம் என்றால் துடிப்புடன் முன்வருவாள்!
ஊர்த்திட்டம்  கைவந்த கலை.

விருந்தோம்பல் பண்பில் சளைக்காத மங்கை!
செருக்கற்ற அன்பால் உறவுகளை
எல்லாம்
அரவணைத்து வாழும் தொடர்பை வளர்த்தாள்!
அவளின்று எப்பற்றும் இன்றியே வாழும்
தவநிலை கொண்டதேன் கூறு.

அந்த வசந்தாவைத் தேடுகின்றேன்! எங்குசென்றாள்?
இந்த வசந்தா இருக்கின்றாள் இங்கேதான்!
என்னவளும் நானும் தனிமையில் வாழ்கின்றோம்!
அந்த வசந்தாவே வா.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home