வீட்டில் தைப்பொங்கல் 2020
15.01.2020
இணையராய்ச் சென்றே கரும்புகள் வாங்கி
கனத்தைப் பொருட்படுத் தாமல்
தோளில்
சுமந்தே நடந்துவந்தோம்! வீட்டுக்குள்
வந்து
சுவற்றில் கரும்புகளைச் சாய்த்தேதான் வைத்தேன்!
சுவைக்கும் சுமைதான் கரும்பு.
பொங்கலோ பொங்கல் 15.01.2020
சர்க்கரைப் பொங்கலுடன் வெண்பொங்கல் பொங்கிவரப்
பொங்கலோ பொங்கலென்று கூவினோம்! சாம்பாரும்
கண்கவர் சட்னியும் பொங்கல் வடைகளும்
வாழைப் பழங்கள் இலையில் படைத்தேதான்
காலைப் பொழுதில் வழிபட்டோம் கூடிநின்று!
நாளும் உழைக்கும் உழவருக்கு நன்றிகூறி
வாழ்த்தினோம் வாழ்கவென்றே இங்கு.
மதுரை பாபாராஜ்
15.01.2020
இணையராய்ச் சென்றே கரும்புகள் வாங்கி
கனத்தைப் பொருட்படுத் தாமல்
தோளில்
சுமந்தே நடந்துவந்தோம்! வீட்டுக்குள்
வந்து
சுவற்றில் கரும்புகளைச் சாய்த்தேதான் வைத்தேன்!
சுவைக்கும் சுமைதான் கரும்பு.
பொங்கலோ பொங்கல் 15.01.2020
சர்க்கரைப் பொங்கலுடன் வெண்பொங்கல் பொங்கிவரப்
பொங்கலோ பொங்கலென்று கூவினோம்! சாம்பாரும்
கண்கவர் சட்னியும் பொங்கல் வடைகளும்
வாழைப் பழங்கள் இலையில் படைத்தேதான்
காலைப் பொழுதில் வழிபட்டோம் கூடிநின்று!
நாளும் உழைக்கும் உழவருக்கு நன்றிகூறி
வாழ்த்தினோம் வாழ்கவென்றே இங்கு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home