Wednesday, March 11, 2020

தமிழக அரசின் திருவள்ளுவ விருதாளர்
வள்ளுவர் குரல் குடும்பப் பெருந்தகையாளர்
 மாண்புமிகு மோகனராசு அவர்களின் ஆசிகளை வேண்டுகிறேன்!

குறள்நெறிக் குரிசில் சி. இராஜேந்திரன்
VOV ஒருங்கிணைப்பாளரின்  முதல் சந்திப்பு

வடலூர் திருக்குறள் மாநாட்டில் பார்த்தார்!
பிறகு மணிமொழியார் பேரில் அறக்கட்ட ளையில்
நடந்தநல் சொற்பொழிவில் பார்த்தார்!முதுமை
வடம்பிடித்த போதும் இளைஞரைப் போல
குறள்பரப்பும் மோகனாரை வாழ்த்து.

மோகனார் சாதனைகள்!

சென்னையின் பல்கலைக் கூடத்தில்
நீண்டகாலம்
செந்தமிழ்த் தேன்குறளை ஆய்வுசெய்தார்! அக்குறள்கள்
தன்னுடைய மூச்சாக பேச்சாக வாழ்வாக
பண்பாளர் போற்றுவதை வாழ்த்து.

வள்ளுவர் கோட்ட வளாக அரங்கத்தில்
வள்ளுவத்தைத் தொய்வின்றி ஆய்வுசெய்யும் ஏந்தலாவார்!
தொள்ளா யிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுகளைச்
செய்தே படைத்துள்ளார் வாழ்த்து.

செய்தளித்த ஆய்வுகளில் நூற்றுக்கும்
மேலாக
எல்லோர்க்கும் இங்கே பயனளிக்க நூலாக
அள்ளி வழங்கிய சாதனை யாளராக
உள்ளவரை நீடுவாழ வாழ்த்து.

திருக்குறள் தொண்டை மதித்தே அரசு
விருது வழங்கிச் சிறப்பித்துப் போற்றிப்
பெருமைப் படுத்திய   மெய்த்தொண்டர்!
வாழ்த்து!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

உலகத் திருக்குறள் மையம் நிறுவி
தளராமல் மாநாடு ஆய்வரங்கம் என்றே
உயர்வள் ளுவத்தைத் தூக்கிப் பிடிக்கும்
வியத்தகு சாதனையை வாழ்த்து.

அன்னையின் ஆசி வழிநடத்த மோகனார்
நன்னெறியில் வள்ளுவத்தைப். போற்றித்தான் வாழ்கின்றார்! இல்லத்தில் மூவா யிரத்திற்கும் மேற்பட்ட
வள்ளுவ நூல்களின் நூலகம் வைத்துள்ளார்
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

வயதோ எழுபத் திரண்டிலே இன்றும்
அயராத நல்லுழைப்பை வள்ளுவத்திற் காக
பரபரப்பாய் ஈந்துவக்கும்  காரணத்தால் அய்யா
உலகில் குறளின் விழுது.

வள்ளுவத்தின் நல்லறத்தை இல்லறத்தில்  போற்றுகின்றார்!
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் என்றேதான்
வள்ளுவத்தை வாழ்வியலாய் மாற்றித்தான் வாழ்கின்றார்!
நல்லவர் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home