Wednesday, March 11, 2020

ஆசுகவி வீரபாண்டியத் தென்னவன் அவர்களுக்கு வாழ்த்துப்பா!

தென்னவன் என்றேதான் அன்பாய் அழைத்திடுவோம்!
வங்கியில் காசாள ராகப் பணிபுரிந்தார்!
செந்தமிழ்ப் பற்றாளர்! பேச்சு கவிமழைதான்!
எங்களின் ஆசுகவி தான்.

மூச்சுக்கு மூச்சிங்கே முந்நூறு பாவரும்!
பேச்சுக்குப் பேச்சிங்கே செந்தமிழ் ஊறிவரும்!
மாமதுரைப் பேரில் கவிஞர்கள் பேரவை
நாட்டில் கவியரங்கம் எல்லாம் நடத்திவரும்
ஆற்றல் மிளிர்பவ ராம்.

இலக்கிய மேடை நிகழ்வுகளுக் கெல்லாம்
உவந்தளிக்கும் நன்கொடைகள் ஏராள மாகும்!
தரமான நண்பர்! தனித்தமிழ்ச் சான்றோன்!
வளமுடன் வாழ்கபல் லாண்டு.

நூல்கள் படைத்தவர்! மற்றவரை ஊக்குவித்தே
நூல்கள் படைப்பதற்குத் தூண்டித்
துலங்கவைப்பார்!
பாவேந்தர் நூற்றாண்டில் சான்றிதழ் பெற்றவர்!
ஈரடி போற்றியே இல்லறத்தில் நல்லறத்தை
வேரோடச் செய்யும் விழுது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home