ரவி சுபா சுசாந்த் குடும்பம்.
வாரம் ஒருமுறை காய்கள் பலசரக்கு
வாங்கிவந்து திட்டமிட்டு நாளும் சமைக்கின்றாள்!
நாங்கள் கடைகளுக்குச் செல்லத் தடைபோட்டாள்!
பார்க்கின்றோம் நாளும் அமர்ந்து.
பணிக்கள வேலையை வீட்டில் இருந்தே முடிக்க
தனியறை செல்வாள்! முடிப்பாள் தினமும்!
வசந்தாவும் தன்னால் இயன்றதைச் செய்வாள்!
நடந்திடும் வாழ்க்கை முறை.
மகனின் விருப்பங்கள் தேவை உணர்ந்து
மகனுக் குணைவு வகைகள் சமைப்பாள்!
அடங்கிவிட்டோம் வீட்டில்! தனித்தனி யாக!
கடக்கிறது வாழ்க்கை நடந்து.
நமக்காக நம்மையே காப்பதற் காக
சுமையாய் இருந்தாலும் ஏற்கப் பழகி
அமைந்திட்ட வாழ்வை இயக்குகிறோம் நாம்தான்!
இமைபோல் கடமையைப் பார்.
ரவி
துபாயில் பணிக்கள வாழ்க்கை! நிதமும்
துபாயில் இருந்தே தொலைப்பேசி மற்றும்
கணினி ஸ்கைப்பிலே பேசி குடும்பக்
கணிப்பை உணர்ந்து உதவுகின்ற ஆற்றல்
தனிநிலை கொண்டார்! உடல்நலம் கேட்பார்!
இனிமையாய்ப் பேசி மனைவி மகனும்
தனிமையை இங்கே உணராத வண்ணம்
சிரித்து உரையாடும் அன்புள்ளம் கொண்டார்!
தவிப்பிருந்தும் காட்டாத பண்பு.
மதுரை பாபாராஜ்
வாரம் ஒருமுறை காய்கள் பலசரக்கு
வாங்கிவந்து திட்டமிட்டு நாளும் சமைக்கின்றாள்!
நாங்கள் கடைகளுக்குச் செல்லத் தடைபோட்டாள்!
பார்க்கின்றோம் நாளும் அமர்ந்து.
பணிக்கள வேலையை வீட்டில் இருந்தே முடிக்க
தனியறை செல்வாள்! முடிப்பாள் தினமும்!
வசந்தாவும் தன்னால் இயன்றதைச் செய்வாள்!
நடந்திடும் வாழ்க்கை முறை.
மகனின் விருப்பங்கள் தேவை உணர்ந்து
மகனுக் குணைவு வகைகள் சமைப்பாள்!
அடங்கிவிட்டோம் வீட்டில்! தனித்தனி யாக!
கடக்கிறது வாழ்க்கை நடந்து.
நமக்காக நம்மையே காப்பதற் காக
சுமையாய் இருந்தாலும் ஏற்கப் பழகி
அமைந்திட்ட வாழ்வை இயக்குகிறோம் நாம்தான்!
இமைபோல் கடமையைப் பார்.
ரவி
துபாயில் பணிக்கள வாழ்க்கை! நிதமும்
துபாயில் இருந்தே தொலைப்பேசி மற்றும்
கணினி ஸ்கைப்பிலே பேசி குடும்பக்
கணிப்பை உணர்ந்து உதவுகின்ற ஆற்றல்
தனிநிலை கொண்டார்! உடல்நலம் கேட்பார்!
இனிமையாய்ப் பேசி மனைவி மகனும்
தனிமையை இங்கே உணராத வண்ணம்
சிரித்து உரையாடும் அன்புள்ளம் கொண்டார்!
தவிப்பிருந்தும் காட்டாத பண்பு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home