SBI
இந்திய மாநில வங்கி
நற்கூடல் இலக்கியக் கழகம்!
மேலவெளி வீதி
STATE BANK OF INDIIA!
1984 முதல்
கவிஞர்கள்:
முனியப்பன்
வீரபாண்டியத் தென்னவன்
சீவகன் -- மல்லையா
நற்கூடல் சங்கத்தில் இவர்கள் இணைந்ததும்
உத்வேகம் வந்தது! எல்லா நிகழ்வுக்கும்
சற்றும் சளைக்காமல் நன்கொடை தந்தனர்!
புத்துணர்ச்சி பெற்றோம் இணைத்து.
கவிதை எழுதுகின்ற போட்டியில் வந்து
கலந்துகொண்டு வென்றார் பரிசுகளை! ஆர்வம்
வளர்ந்தது இந்தக் கழகம் வளர்ந்து
நிலைக்கத் தொடங்கிய திங்கு.
பட்டிமன்றம் மற்றும் கவியரங்கம் பேச்சரங்கம்
செந்தமிழ்ச் சங்கத்தில் நாட்டியப் போட்டியென்று
என்னென்ன போட்டிகள் வைத்தே நடத்தினோம்!
இன்று நினைத்தாலும் சிலிர்ப்பு.
பெரிதான மீசை! உயரமான தோற்றம்!
உருதரும் வன்மை! உள்ளமோ மென்மை!
அருந்தமிழ்ப் பாவலர் நட்பில் நளினம்
செருக்கற்ற நண்பர் முனியப்பன் வாழ்க!
செழுந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மூச்சுக்கு மூச்சிங்கே முந்நூறு பாட்டுவரும்
பேச்செல்லாம் பாட்டுதான் சிந்தனையே பாட்டுதான்
ஏற்றம் இறக்கமுடன் சந்தங்கள் தென்னவனை
நாட்டமுடன் பற்றும் உணர்.
காலம் நகர்த்துகின்ற காய்களானோம்! எங்கெங்கோ
வாழும் நிலையெடுத்தோம் ஒன்பதாண்டு நட்பிலே
நாளும் திளைத்தோம் தொடர்கிறது இன்றளவும்!
கோள்மாறும்! மாறாது நட்பு.
மதுரை பாபாராஜ்
மலரும் நினைவுகள் மாங்கனிகளாக இருக்கின்றன பாபா நன்று நன்றி மகிழ்ச்சி
தென்னவன்
இந்திய மாநில வங்கி
நற்கூடல் இலக்கியக் கழகம்!
மேலவெளி வீதி
STATE BANK OF INDIIA!
1984 முதல்
கவிஞர்கள்:
முனியப்பன்
வீரபாண்டியத் தென்னவன்
சீவகன் -- மல்லையா
நற்கூடல் சங்கத்தில் இவர்கள் இணைந்ததும்
உத்வேகம் வந்தது! எல்லா நிகழ்வுக்கும்
சற்றும் சளைக்காமல் நன்கொடை தந்தனர்!
புத்துணர்ச்சி பெற்றோம் இணைத்து.
கவிதை எழுதுகின்ற போட்டியில் வந்து
கலந்துகொண்டு வென்றார் பரிசுகளை! ஆர்வம்
வளர்ந்தது இந்தக் கழகம் வளர்ந்து
நிலைக்கத் தொடங்கிய திங்கு.
பட்டிமன்றம் மற்றும் கவியரங்கம் பேச்சரங்கம்
செந்தமிழ்ச் சங்கத்தில் நாட்டியப் போட்டியென்று
என்னென்ன போட்டிகள் வைத்தே நடத்தினோம்!
இன்று நினைத்தாலும் சிலிர்ப்பு.
பெரிதான மீசை! உயரமான தோற்றம்!
உருதரும் வன்மை! உள்ளமோ மென்மை!
அருந்தமிழ்ப் பாவலர் நட்பில் நளினம்
செருக்கற்ற நண்பர் முனியப்பன் வாழ்க!
செழுந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மூச்சுக்கு மூச்சிங்கே முந்நூறு பாட்டுவரும்
பேச்செல்லாம் பாட்டுதான் சிந்தனையே பாட்டுதான்
ஏற்றம் இறக்கமுடன் சந்தங்கள் தென்னவனை
நாட்டமுடன் பற்றும் உணர்.
காலம் நகர்த்துகின்ற காய்களானோம்! எங்கெங்கோ
வாழும் நிலையெடுத்தோம் ஒன்பதாண்டு நட்பிலே
நாளும் திளைத்தோம் தொடர்கிறது இன்றளவும்!
கோள்மாறும்! மாறாது நட்பு.
மதுரை பாபாராஜ்
மலரும் நினைவுகள் மாங்கனிகளாக இருக்கின்றன பாபா நன்று நன்றி மகிழ்ச்சி
தென்னவன்
0 Comments:
Post a Comment
<< Home