Sunday, April 26, 2020

கஜபதி தாத்தா! சின்னிகிருஷ்ணா பாட்டி!

காரைக்குடியில் கஜபதி் தாத்தா!

1970 -- 1976 ஆம் ஆண்டுகளில்!

அக்கால காவல் துறையிலே ஆய்வாளர்!
அக்கறை கொண்டே கடமைகள் ஆற்றிட
பற்றுடன் நாளும் குதிரைமேல் செல்வாராம்!
கம்பீரம் கொண்ட உரு.

சின்னி கிருஷ்ணா பெயர்கொண்ட பாட்டியோ
கொண்டுவந்தார்  தந்தத்தால் செய்தகட்டில்  பொன்மணிகள்
என்றே குடும்பத்தார் சொல்வார்கள் பார்த்ததை!
அம்மாவின் அம்மாவும் அப்பாவும் இப்படி
நன்முறையில் வாழ்ந்தவ ராம்.

குதிரைகள் ஓடுகின்ற பந்தயத்தில் நாட்டம்!
எதிர்பாரா மல்தான் ஒருமுறை வெற்றி
அடைந்தாராம் தாத்தாதான்! பம்பாயில் தங்க
கிடைத்ததெல்லாம் கள்ளன் அபகரித்துச் சென்றான்!
நடைகட்டி வந்தார் வீடு.

இக்குதிரை அக்குதிரை எக்குதிரை வெற்றிபெறும்?
கச்சிதமாய் சோதிடம் சொல்கின்ற ஆற்றலுண்டு!
சென்னையில் பாரிசில் வைத்தார் அலுவலகம்!
தன்முனைப்பில் வாழ்ந்தவரை வாழ்த்து.

அகவையோ தொன்னூறு தாண்டியும் வாழ்ந்தார்!
தரணியில் எங்கெங்கோ வாழ்ந்து சுழன்று
இறுதியில் காரைக் குடியிலே வாழ்ந்தார்!
இறுதிவரை சோதிடம் தேன்.

காரைக் குடியிலே நான்படித்த நேரத்தில்
காலையில் என்னிடத்தில் காட்டுவார் பந்தயத்தில்
எக்குதிரை வென்றது என்றே கணித்ததை!
இந்துநா ளிதழின் முடிவில்  இவர்கணித்த
அந்தக் குதிரையே வென்றிருக்கும்! கைகொடுத்தேன்!
அன்புடன் வாழ்ந்தார் மகிழ்ந்து.

மாலதி அத்தை இவரை அருமையாக
பார்த்தார் மகள்போல! காலைமுதல் தூங்குமட்டும்
ஆர்வமுடன் பார்த்தார் கஜபதி தாத்தாவை!
வேலைக்குச் சென்றுவந்தும் தாத்தாவை அப்படிப்
பார்த்தார்! மிகையில்லை! வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home