Friday, April 24, 2020

அக்கா லெட்சுமி-- பாவா முத்துவீரன் திருமணம்!

25.08.1960

கேப்ரன்ஹால் பள்ளியில் நாங்கள் படித்தபோது
ஆர்வமுடன் என்னை அழைத்தேதான் சென்றிடுவார்!
கான்வெண்ட் பள்ளிக்கு மாறினோம்!
அக்காதான்
நாள்தோறும் சேர்ந்தேதான் செல்வோம்!

அக்காவின் கால்நடை வேகத்தை விஞ்சநான்
அக்கறையாய் ஓடுவேன்!  பள்ளிப் படிப்புதனை
ஆண்டிலேயே வெற்றிபெற்றார்! பின்னர் திருமணம்!
ஏற்பாடு செய்தார் விழைந்து.

அத்தை மகனான முத்துவீரன் பாவாவும்
அக்காவும் மாமா மகளுமான லெட்சுமியும்
ஒத்த மனதுடன் இந்தத் திருமணத்தை
அற்புதமாய் ஏற்றார் இருவீட்டார் ஆசியுடன்!
அக்காவின் இல்லற மாட்சியாகும் வாழ்க்கையில்!

உற்றார் உறவினர் கூட்டத்தைக் கண்டதால்
சுற்றிவந்தேன் நான்தான்   அங்கு.
திருமண மண்டபத்தில் கூட்டமோ கூட்டந்தான்!
இரவில் ஜெயாபாப்பா நாட்டியம் ஆட
விருந்தின ராகத்தான் பென்னர் இயக்குநர்
பெல்த்தாம் அவர்களோ கண்டு களித்திருந்தார்!
எல்லோர்க்கும் இன்பந்தான் கண்டு.


திருமணம் எல்லாம் நிறைவுசெய்தே வீட்டில்
வருகைதந்தார்! கொஞ்சநாள் ஆனதும் பாவா
அலுவலக ஊரில் பந்தல் குடிக்கு
அனைவரும் சென்றோம் மகிழ்ந்து.
பாவா வருவாய்த் துறையிலே ஆய்வாளர்!
ஏக வரவேற்பு! வந்துவந்து பார்த்தனர்!

ஆகமொத்தம் அங்கே வரவேற்போ அற்புதம்!
ஊரறிய செல்வாக்கு தான்.
இல்லறத்தில் நான்கு மகன்கள் அருமையாக!
பல்முனை ஆற்றல் பதவி வகித்தவர்!
பல்வேறு ஊர்களுக்கு மாற்றங்கள் ! நால்வரும்
செவ்வனே கல்வி கசடறக் கற்றவர்கள்!
எல்லோரும் தங்கள் குடும்பக் கடமைகளை
நல்லபடி செய்தேதான் தங்கள் குழந்தைகள்
இவ்வுலகில் முன்னேறப் பாடுபடும் வாழ்க்கையில்
எல்லோரும் வாழ்கின்றார் இங்கு.

அக்கா தலைமையில் இங்கே மகன்கள் குடும்பங்கள்
சுற்றம் சிறக்கத்தான் வாழ்கின்றார்
நாள்தோறும்!
அக்காவும் பேரனும் பேத்திகளும் சூழ்ந்திருக்க
இத்தரணி வாழ்வில் மருமகள்கள் வாழ்த்திசைக்க
சுற்றமுடன் வாழ்கின்றார் பார்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home