Friday, April 24, 2020

தாத்தா பாட்டி

தாத்தா சுந்தர்ராஜன்
பாட்டி பாகீரதி( பாக்கியம்மாள்)

நிலக்கோட்டை-- சத்திரப்பட்டி-- மேலூர்-- மதுரை!

நிலக்கோட்டை சார்ந்த பகுதியில் தாத்தா
வருவாய்ஆய் வாளராக வேலை! வீடு
பரபரப்பாக எப்போதும் காணப் படுமாம்!
பெருமையுடன் பாட்டிதான் சொல்வார் மகிழ்ந்து!
ஒருமித்து வாழ்ந்த இணை.

சீரடி சாய்பாபா பக்தராக தாத்தாதான்
காலமெல்லாம் வாழ்ந்தார்! வியாழக் கிழமை
சீரடி பாபா படம்வைத்தே பூசைசெய்தார்!
மோதிலால் சாலை முதல்தெருவில் வாழ்ந்தனர்!
மோதிலால் சாலை முதல்தெருவில் எங்கவீடு!
பார்க்க வருவார் நடந்து.

வியாழக் கிழமை வழிபாடு காண
தவறாமல் குழந்தைகள்  செல்வோம் திரண்டு!
கலந்துகொண்டு தாத்தா பிரசாதம் வாங்கி
கலைந்தேதான் செல்வோம் மகிழ்ந்து.

மூன்று மகள்கள் இரண்டு மகன்களும்
வாரிசுகள்! இந்தக் குடும்பத்தார் வாழ்கின்றார்!
மூன்றாம் வகுப்பு நான்படித்த போதுதான்
தாத்தா இறந்தார் படுத்து.

பாட்டி திடீரென்றே கீழே விழுந்துவிட்டார்!
பாட்டியைப் பார்க்க மருத்துவர் ராசாராம்
வீட்டிலே வந்து சிகிச்சை அளித்தாலும்
பாட்டி இறந்துவிட்டார் இங்கு.

இன்பமும் துன்பமும் வாழ்வில் அரங்கேற
பன்னெடுங் காலம் உலகிலே வாழ்ந்தவர்கள்!
அன்பாய்ப் பழகி அறிவுரை தந்தவர்கள்!
எந்தன் நினைவலையில் இன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home