Wednesday, April 22, 2020

கலித்தொகைக்காட்சி! உடன்போக்கு!

  பாலை பாடிய பெருங்கடுங்கோ (கலித்தொகை : 9)

--------------------------------------------------------------
கலித்தொகை  பாடல் 9
கவிதை முயற்சி
------------------------------------------
சந்தனம் தந்த பெருமலைக்கு
சந்தனத் தாலே பயனில்லை
சந்தனம் கூட மக்களுக்குப்
பலவகை யாலே பயன்படுமே!

முத்தைத் தந்த கடலுக்கு
முத்துக ளாலே பயனில்லை
முத்துகள் எல்லாம் மக்களுக்கே
சொந்தம் ஆகிப் பயன்படுமே!

யாழில் உள்ள நரம்புகளால்
யாழுக்கு எந்தப் பயனுமில்லை
நரம்புகள் மீட்டும் இசைகேட்டு
மகிழ்வது மக்கள் பயன்தானே!

மகளோ பருவம் வந்தவுடன்
தலைவனை நாடல் முறைதானே!
சந்தனம் முத்து யாழ்நரம்பாய்
மகளின் பயனோ தலைவனுக்கே!

மகளைத் தேடி தாய்வந்தாள்
சான்றோர் இப்படி ஆறுதலை
தாயிடம் சொல்லிப் புரியவைத்தார்!
தாயும் மகிழ்ந்தே விடைபெற்றாள்

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home