நோய்கள் புதிதல்ல!
எண்ணற்ற நாடுகளை எண்ணற்ற நோய்களின்
வன்முறைத் தாக்கம் அதிரடி தந்தது!
எண்ணற்ற மக்கள் பலியாகி வாழ்விழந்தார்!
மண்ணக மாந்தர்கள் எல்லோரும் மீறித்தான்
தங்களது வாழ்வைப் புனரமைத்து வாழ்கின்றார்!
அங்கங்கே நாளும் அறிவியல் முன்னேற்றம்
வந்துசென்ற நோய்கள் குணமாகும் மாமருந்தைக்
கண்டு பிடித்தேதான் மாந்தரைக் காக்கின்றார்!
இன்னும் உலகம் இருக்கு.
எங்கிருந்தோ வந்தநோய் இந்த உலகத்தை
அங்கங்கே ஆட்டிப் படைக்கிறது! மக்களைத்
தங்களது வீட்டில் முடங்கவைத்துப் பார்க்கிறது!
லட்சக் கணக்கில் மாந்தர் இறந்துவிட்டார்!
வல்லரசு நாடுகள் ஒன்றன்மேல் ஒன்றிங்கே
குற்றம் சுமத்துகின்றார்! எல்லாம் முடிந்ததே!
அற்பர்கள் ஆட்டம் இது?
அமைதியாய் வாழ்ந்த உலகத்தை இன்று
அமைதி குலையவைத்தே அப்பாவி மக்கள்
நிலைகுலைந்து போகவும் செத்து மடியும்
நிலைபார்த்து நிற்கவும் எந்த மருந்தும்
குணமாக்க இல்லையென்றும் கண்டு கலக்கம்
மனதினைக் கவ்வுதே பார்.
நோய்களின் தாக்கம் நெருங்கா திருப்பதற்கு
ஊரடங்கும் வீடடங்கும் போட்டார் அரசுகள்!
கேட்டுவாழ்ந்தால் வெல்லலாம் நோய்ப்பரவல் இன்றித்தான்!
நாட்டுமக்கள் கேட்டால் நலம்.
நோய்கள் புதிதல்ல! பிளேக்நோய் போல்பல
நோய்களும் தொற்றுநோய்கள் பாதித்த மக்கள்தான்!
கால்பதிக்கும் நோய்கள் காலத்திற் கேற்றவாறு
கோலமாறி தாக்கினாலும் எச்சரிக்கை யோடுவாழ்ந்தால்
நோயைத் தவிர்க்கலா மாம்.
புயல்கள் சுனாமி வறட்சிநிலை என்றே
கலங்கவைத்த சூழ்நிலையை வென்றோம்! நிமிர்ந்தோம்!
கொரோனாவின் சூழலையும் ஒன்றிணைந்தே வெல்வோம்!
தரணியைக் காப்போம் துணிந்து.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home