Saturday, April 18, 2020

மருமகன் ரவி பிறந்தநாள்

மருமகன் ரவி பிறந்தநாள் வாழ்த்து!

18.04.20

பட்டாபி ராமில் பிறந்து படிப்படியாய்க்
கற்றறிந்து நாளும் வளர்ந்தேதான் சென்னையில்
அப்போலோ என்னும் மருத்துவக் கூடத்தில்
பெற்றார் அனுபவங்கள்! அத்தகைய ஆற்றலைத்
தக்கவைத்த காரணம் துபாயில் பணிசெய்ய
அற்புத வாய்ப்பு கிடைத்தது! நாள்தோறும்
நற்பெயர் ஈட்டி உழைக்கின்றார்! வாழ்கவே!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

அன்பு மனைவி சுபாவும் மகன்சுசாந்த்தும்
என்றும் துணையிருக்க இல்லறத்தில்
நல்லறத்தைக்
கொண்டேதான் பன்முக ஆற்றல் மிளிர்ந்திருக்க
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்
வசந்தா
உடன்வாழ்த்தும் இதயங்கள்

எழில்-- சத்யா-- நிக்கில்-- வருண்

அண்ணியார் அருணாபாய்
மோகன்-- வினோ-- கீர்த்தனா-- ஆகாஷ்

0 Comments:

Post a Comment

<< Home